யாழ் – வவுனியா அரச பேருந்தினுள் நடுவழியில் நாகராணி….. அலறியடித்த பயணிகள்!!
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எதிர்பாராதவிதமாக பெரிய நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைத்துள்ளனர்.
பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தால் பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளனர்.
காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகியும் பயணிகள் யாரும் நாகப்பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் வாகனத்தின் எல்லைக்குள் நாகப்பாம்பைக் கண்டுள்ளார்.
நாகப்பாம்புடன் பேருந்தை தொடர்ந்து இயக்கிய சாரதி இப்போது ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.