ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்??
கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி.
இவர் தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அகமத் இயக்கும் ‘ஜன கன மன’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதுதவிர பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜெயம் ரவி.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, நடிகை பிரியா பவானி சங்கர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.