“கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” – விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
தடுப்பூசி முன்னுரிமை பட்டிலுக்கு ஏற்றவாறு தமது வேலைகளை செய்ய விடாது சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் செல்வாக்கு மிக்க அதிகாரிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தமது அதிகாரத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் கொழும்பு மாநகரசபைக்குள் பதிவாகி உள்ளது என PHIU தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படும் அரசியல்வாதிகளிடமிருந்து இதுபோன்ற நடத்தைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் மாகாண அரசியல்வாதிகள் என்றாலும், அவர்கள் தேசிய அளவிலான அரசியல்வாதிகளின் கீழ் செயற்படுகின்றார்களா என்பது எங்களுக்கு தெரியாது.
இந்த செயல்கள் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும், அத்தகைய அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி வழங்கலின் போது சுகாதார அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் எச்சரிக்கிறார்.