களுபோவில வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்களுக்கு உறுதியானது கொரோனா தொற்று!
கொழும்பு களுபோவில போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் இரு வைத்தியர்கள் மற்றும் ஒரு தாதியருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு வைத்தியர், குழந்தைகள் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.