பிரபல நடிகையை அடையாளம் தெரியாமல் மாற்றிய ஒரு ஊசி!!
கன்னட சீரியல் நடிகை ஒருவர் பல் வலிக்காக சிகிச்சக் மேற்கொண்டபோது முகம் வீங்கி மோசமாக சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வருபவர் சீரியல் நடிகை சுவாதி.
இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் சுவாதி நடித்துள்ளார்.
இந்நிலையில்,
கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதி பல் வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்திகொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால்,
அவரும் அந்த ஊசியை செலுத்திக்கொள்ள சுவாதியின் முகம் எதிர்பாராத நிலையில் கோரமாக வீங்கி முகம் அமைப்பே மாறியுள்ளது.
இதனால்,
பதறி 20 நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ளார்.
பின் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் எனக்கூறியுள்ளார்.
ஆனாலும்,
தற்போது வரை முக வீக்கம் சரியாகவில்லை.
மருத்துவமனை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டாலும் சரியாக யாரும் பதில் கொடுக்கவில்லை என்று குற்றாச்சாட்டியு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார் சுவாதி.