விக்னேஸ்வரா கல்லூரி வீதி நீர் வடிகால் சம்பந்தமான கூட்டம் இன்று!!
நாளைய தினம் நடைபெறவுள்ள கரவெட்டி விக்னேஸ்வரா வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியை நீர் வடிகால் செய்யாமல் புனரமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
நீர் வடிகால் செய்யாமல் வீதி அபிவிருத்தி நடைபெற்றால் நெல்லியடி பிரதான வீதியால் வரும் வெள்ளம் முதல் அனைத்து வெள்ள நீரும் கரவெட்டி இராஜ கிராமம் மற்றும் மத்தொணி கிராமங்கள் உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து,
குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் கரவெட்டி பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்கப்பட்ட போது,
தாமும் ஒவ்வொரு கலந்துரையாடலில் ஒவ்வொரு விடயம் குறிப்பிட்ட பின்னர் அதனை எதிர்கொள்வதற்கான விபரங்களை குறிப்பிட்டு அடுத்த கலந்துரையாடலில் கூறுகிறார்களே தவிர
வடிகால் அமைப்பது தொடர்பாக பொறியியலாளர் இணங்கமான தீர்வை தருவதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களால் கட்டாயமாக வடிகால் அமைப்பு செய்தே வீதியை புனரமைக்க வேண்டும்.
அல்லாவிடின்,
இதனால் சில கிராம மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டு குறித்த விடயம் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று(07/03/2022) கரவெட்டி பிரதேச செயலகத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் சில அதிகாரிகளால் சில கிராம மக்களுக்கு தவறான விழிப்புணர்வை ஏற்படுத்தி நீர் வடிகால் செய்யாமல் வீதி அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது.
இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த ஊடகவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.