2021-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக “கரோலினா பிலாவ்ஸ்கா” தெரிவு!!

2021-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா (Karoline Bielawska) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கடந்த ஆண்டிற்கான போட்டிகள் நடைபெறவில்லை.

தொற்று பரவல்கள் குறைவடைந்துள்ள நிலையில், தள்ளிப்போன 2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி Puerto Rico-வில் நடந்து முடிந்துள்ளது.

இதில்,

போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாம் இடம் ,

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாளி பெண்ணான ஸ்ரீ சைனிக்கும் (Shree Saini),

மூன்றாவது இடம் ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த ஒலிவியா யாஸுக்கும் (Olivia Yace) வழங்கப்பட்டது.

உலக அழகி கரோலினா தற்போது முதுகலை பட்டப்படிப்பை தொடர்ந்து வரும் நிலையில்,

முனைவர் பட்டம் பெற விருப்பம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *