காணாமல் போன இளவரசி….. இங்கிலாந்தில் புதிய பரபரப்பு!!

வேல்ஸ் இளவரசி கேத் மிடில்டனை(Kate Middleton, Princess of Wales) காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரச குடும்பத்தில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது.

வில்லியம்கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக புதிய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது.

சர்ச்சைகளின் உச்சமாக இளவரசி கேத் மிடில்டனை(Kate Middleton) காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஜனவரி மாதம் முதல் இளவரசி கேத் மிடில்டன்(Kate Middleton) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து,

மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்

வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று கென்சிங்டன் அரண்மனை ஒரு சில வாரங்கள் முன் செய்தி வெளியிட்டது.

கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்தியில்,

இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

அவர் ஈஸ்டர் பண்டிகை வரை (31/03/2024 வரை) அரச கடமைகளை செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அரச கடமைகளை செய்வதில் இருந்து விலகியுள்ளார் என்று சொல்லப்பட்டது.

இதனிடையே,

அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறி அதிர வைத்துள்ளார் ஸ்பானிஷ் செய்தியாளர் கான்சா காலேஜா என்பவர்.

கேத்தின் உடல்நிலை அரண்மனை வெளியிட்ட தகவல்களை விட மோசமாக உள்ளது.

அவர் ஆபத்தில் இருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்கு பிறகான உடல்ரீதியான சிக்கல் காரணமாக கேத் கோமா நிலைக்குச் சென்று விட்டார்.

இதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

செய்தியாளர் கான்சாவின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள கென்சிங்டன் அரண்மனை இந்த தகவல் கேலிக்குரியது. இளவரசி நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார் என்று கூறியுள்ளது.

இதனை அரண்மனை மறுத்தபின்பும் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால்,

பிரிட்டன் அரசக் குடும்பத்திலேயே அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவர் என அறியப்படுகிறார் கேத் மிடில்டன். அப்படிபட்டவரின் உடல்நிலை மோசமானது என்றால், அவரது ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படாதது ஏன் என்பதே இங்கிலாந்து மக்களின் கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *