கட்டுநாயக்கவில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிய ஈரானிய பிரஜை!

இத்தாலிய பிரஜை போல் ஆள்மாறாட்டம் செய்து  இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் (Iran) பிரஜை ஒருவரை  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள (Department of Immigration and Emigration) அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

இத்தாலிய கடவுச்சீட்டின் விவரங்களைப் பயன்படுத்தி ‘ஒன் அரைவல் விசாவிற்கு விண்ணப்பிக்க முயன்ற 40 வயதான ஈரானியப் பிரஜையை BIA வருகை முனையத்தில் குடியேற்றத் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்

நேற்றையதினம் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் G 9502 இல் கட்டுநாயக்க வந்த பயணி வருகைக்கான விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக தனது இத்தாலிய கடவுச்சீட்டின் விவரங்களை உள்ளிட முற்பட்டபோது, ​​அது தொலைந்து போன கடவுச்சீட்டு என கணினி கண்டறிந்துள்ளது.

அதன் போது, இத்தாலிய கடவுச்சீட்டின் உள்ளிடப்பட்ட விவரங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட கடவுச்சீட்டு என சர்வதேச காவல்துறையுடன் தொடர்புடைய BIA இல் உள்ள குடிவரவுத் துறை அமைப்பு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், பயணி தனது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டர்களுக்கு வழங்க முயன்றுள்ளார்.

அதனை தொடர்ந்து எல்லைக் கண்காணிப்புப் பிரிவின் (BSU) மூத்த குடிவரவு அதிகாரி கூறுகையில், சந்தேகநபர் நாட்டிற்குள் நுழைய முயற்சித்ததன் பின்னணியில் உள்ள நோக்கம் தெளிவாக இல்லை என்றும், சிறிது நேரத்தில் அவர் அதே விமானத்தில் ஷார்ஜாவுக்குத் திரும்பினார் என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *