தற்பொழுது நாட்டில் ஏற்படட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி காற்றுடன் கூடிய அதிகமழை பெய்து வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக இன்று 28.11.2025 காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது. மற்றும் கனகாம்பிகை குளமும் தற்பொழுது வான் பாய்ந்த வண்ணம் உள்ளது கல்மடு குளம் தனது கொள்ளளவை எட்டி வான் பாய ஆரம்பித்துள்ளது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகளில் வாழும் மக்;கள் மிகுந்த அவாதானத்துடன் செயற்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
