மேலுமொரு மரணமும் பதிவு….. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!!
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு (மிதப்பு பாலம்) கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய,
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரது எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது. இவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி திருகோணமலை கிண்ணியாவில் உள்ள குறிஞ்சாக்கேணிப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பரிதாபமாக பலியானதுடன், அவ்விபத்து இலங்கை முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.