கெளதாரி முனை கடலில் மூழ்கிய யாழ் இளைஞன்!!
பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு நேற்று ஞாயிற்றுக் கிழமை கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர்.
இதன் போதே இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார். கடலில் மூழ்கிய இளைஞனை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மீசாலையைச்சேர்ந்த 30வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.