குளத்திற்கு குளிக்கச் சென்ற இரு சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை!
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (வயது-13) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 பிரதேசத்தைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (வயது-13) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.