குசால் மெண்டிஸ், குணதிலக, திக்வெல்லவுக்கு தடை?? வெளியான முக்கிய தகவல்!!
பிரித்தானியாவில் பயோ பபுள் விதிகளை மீறிய இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின் Durham நகரில் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சசையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக, நிரோசன் திக்வெல்ல ஆகியோரை இடைநீக்கம் செய்த இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு, 3 பேரையும் இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேற்றிய உடனடியாக நாட்டிற்கு திருப்பி அழைத்தது.
இந்நிலையில், 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் தடை விதிக்க வாய்ப்புள்ளது என பெயர் வெளியிட விரும்பாத இலங்கை கிரிக்கெட் அதிகாரி தெரிவித்தார்.
மூவரும் தங்களது இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பியவுடன், ஹோட்டலில் பயோ பபுளை விட்டு எவ்வாறு வெளியேற முடிந்தது என்பதை குறித்து அறிய இலங்கை கிரிக்கெட் விசாரணையைத் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி ஜூலை 13ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக, நிரோசன் திக்வெல்ல விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.