“லங்கா சதொச” வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
சதொச விற்பனை நிலையங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்று முதல் அமுலாகும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandhula Gunawardane) தெரிவித்துள்ளார்.
கடந்த 04 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது இதனை கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக 5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியிருந்த நிலையில் இந்த நடைமுறை நீக்கப்படுவதாக இன்று அமைச்சர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.