LSG அணிக்கு செல்லும் ரிஷப் பண்ட்.. டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் உருக்கமான பதிவு

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில், டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்றுள்ள ரிஷப் பண்ட் குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

அவரது பதிவில், “ரிஷப் பண்ட் நீங்கள் எப்போதும் என்னுடைய தம்பியாகவே இருப்பீர்கள். என் இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களை நான் நேசிக்கிறேன். உங்களை எனது எனது குடும்பத்தில் ஒருவராக கருதி, முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயன்றுள்ளேன். நீங்கள் வேறு அணிக்கு செல்வதை பார்க்க வருத்தமாகவும் உள்ளது. எப்போதும் நீங்கள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஒரு அங்கம்தான். என்றாவது ஒருநாள் நாம் மீண்டும் ஒன்றுசேர்வோம் என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி ரிஷப். நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது நான் உங்களை உற்சாகப்படுத்துவேன். உங்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனிடையே, டெல்லி அணியில் 9 ஆண்டுகள் விளையாடியது குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *