“லிட்ரோ எரிவாயு” கட்டணத்தை வெளிநாட்டில் இருந்து Doller இல் செலுத்தலாம்….. மீண்டும் வீடுகளுக்கே எரிவாயு!!
இலங்கையிலுள்ள தங்களது உறவினர்களுக்கு கைபேசி செயலி ஊடாக லிட்ரோ எரிவாயு கட்டணத்தை
டொலரில் செலுத்தி பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கையில்,
<p
>வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இதனூடாக,
எந்தவொரு நபருக்கும் இதற்கான செயலி(Application) ஊடாக கட்டணத்தை செலுத்தி தங்களது வீடுகளுக்கே எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும்.
அடுத்த வாரம் முதல் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வாக இது அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.