லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க (Desara Jayasinghe) அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் 1311 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் இந்த காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் இதுவரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே விண்ணப்பித்துப் பயன்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.