ஊரடங்குச் நேரத்தில் கைப்பற்றப்பட்ட 70, 000 ஆயிரம் மில்லி வீற்றர் கசிப்பு!!
ஊரடங்குச் சட்ட நேரத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மட்டக்களப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த 70, 000 ஆயிரம் மில்லி வீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இரு தோணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையவ இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனை வாவி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பினை மேறடகொண்டள்ளனர்.
இதன்போதே வாவியினுள் தோணிகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களும் எறாவூர் நீதிமன்றத்தி ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.