மீசையை ஷேவ் பண்ணீங்களா லோஸ்லியா?: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!!
அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு லோஸ்லியாவை தேடி பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து வந்தார் லோஸ்லியா. கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கை நிறைய படங்கள் வைத்திருக்கும் லோஸ்லியா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவர் சேலையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அசந்து போனார்கள். சேலையில் தேவதை மாதிரி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பச்சை நிற கவுன் புகைப்படத்தில் லோஸ்லியா கூடுதல் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள். இந்நிலையில் அவர் தன் காதில் பூ வைத்தது போன்ற மூன்று புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஆஹா, வாவ், செம க்யூட், அழகோ அழகு என்று தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக வலைதளவாசிகளோ லோஸ்லியாவை கிண்டல் செய்கிறார்கள்.
சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,
யாருமா உங்க காதுல பூ சுத்தியது. லோஸ்லியா, இப்போ தான் மீசையை ஷேவ் செய்தீர்களா, அப்படியே தெரிகிறது. அங்கு கொஞ்சம் மேக்கப் போட்டு மறைத்திருக்க வேண்டாமா?. இந்த புகைப்படத்தில் செம காமெடியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு மீசை வளர்கிறது போன்று என்று தெரிவித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க சோப்பு விளம்பரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வினுடன் லோஸ்லியா நடித்ததை பார்த்த சிலர், அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினும், லோஸ்லியாவும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அந்த காதலுக்கு லோஸ்லியா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கவின் விலகிச் சென்றுவிட்டாராம். இருப்பினும் கவினும், லோஸ்லியாவும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.