மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்….. பாடசாலை ஆசிரியர் கைது!!
பன்னல பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பன்னல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரான ஆசிரியர் குளியாபிட்டிய நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவரை டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாபிட்டிய நீதிவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தங்கொட்டுவ, வென்னப்புவ மற்றும் மாகந்துர பிரதேசங்களில் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கும் 24 வயதுடைய குறித்த ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பன்னல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் காணப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணையின்போதே, சந்தேக நபரான ஆசிரியரும் கருத்தடை மாத்திரைகளை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதாக பன்னல காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகப்பிரிவு பொறுப்பதிகாரியான காவல்துறை பரிசோதகர் சாவித்திரி சிறிமான்ன நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.