மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்….. செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய மைத்திரி!!
அடுத்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(31/01/2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் அதிபர் இதனைக் கூறியுள்ளார்.
2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை,
தனது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மன்னிப்புக் கோருவதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும்,
ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்காகவும்,
ஏற்பட்ட தவறுகளுக்காகவும் இறைவனிடமும் மக்களிடமும் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.