பெரும்பான்மை – சிறுபான்மை இனத்தவர்களுக்கிடையே மோதல்….. குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்!!
திருகோணமலை, திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராம மக்களுக்கிடையில் இன்று(06/04/2023) மதியம் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதனை கட்டுப்படுத்தும் முகமாக அங்கு காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறுபான்மையினர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் பெருமளவிலான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.