பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவில் 6.4 ரிக்டர் அளவு பாரிய நிலநடுக்கம்!!
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்,
வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் பீதியடைந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அதேபோன்று ,
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லூசன் தீவுப் பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்புத் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.