மண்டான் – குஞ்சர்கடை வீதியில் மோ.சைக்கிள் விபத்து….. ஒருவர் மரணம் – ஆபத்தான நிலையில் 17 வயது மாணவன்!!
வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சற்று முன்னர் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் மண்டான், கரணவாய் மேற்கு, பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
மேலும்,
இவருடன் பயணித்த சிவகுமார் கலையொளி (வயது 17) என்பவருக்கும் ஒரு கால் முடிவடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சையிக்கிளில் பயணித்த வேளை மாடு குறுக்காக பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றியவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.