மணிப்பூர் சம்பவம் – மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை….. குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்!!
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு
வீதியால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் காணொளி எடுத்த நபரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மணிப்பூரில் பழங்குடியினரான குகி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதியால் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,
கடந்த மே மாதம் 4
ஆம் திகதி தமது சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதனால்,
மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கும் நிலையில் பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை,
13000 பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன்,
பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் காணொளி காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
இந்த விவகாரத்தில் பெண்களை காணொளி எடுத்த நபரை கைது செய்து விசாரணை அமைப்புகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும்,
காணொளி எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை நடத்த அமைப்புகள் தீவிரம் காட்டிவருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.