இரு Dose தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று முதல் தொழிலுக்கு செல்ல முடியாது…. மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன்!!
மன்னாரில் பொலிஸ் சோதனை சாவடிகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் கொரோனா தடுப்பூசி அட்டைகளை சோதனையிடுவதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது மன்னாரில் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய,
மன்னார் மாவட்டத்தில், இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பொது இடங்களில் நடமாடுவதற்கும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்து வருவதானாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.