மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்து….. ஆபத்தான நிலையில் பலர் வைத்தியசாலையில்!!
மகாராஷ்டிராவின் தொடருந்து நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் அமைந்திருந்த நடைபாதை மேம்பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (27/11/2022) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தின்போது,
நடைபாதை மேம்பாலத்தில் நடந்துகொண்டிருந்த சிலர் தொடருந்து தண்டவாளத்தில் விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் மொத்தமாக 13 பேர் நடைபாதை மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும்,
அவர்களுள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.