இலங்கையில் உச்சம் தொட்ட்து வெப்ப சுட்டெண்….. நாளை முதல் 39 – 45°C வரை அதிகரிக்கும்!!
இலங்கையின் பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி,
மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரதேசங்களில் வெப்பநிலை 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளை,
காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சாதாரண வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே,
பொதுமக்கள் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும்,
கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும்,
இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.