மேடையில் பறிக்கப்பட்ட கிரீடம் மீண்டும் புஷ்பிகாவுக்கே சென்றது – திடீர் திருப்பம்
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கைக்கான திருமதி அழகி போட்டியில் கிரீடம் பறிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு நேற்று மீண்டும் கிரீடம் வழங்கப்பட்டுள்ளது.
அன்று நடந்த சம்பவம் குறித்து வருந்துவதாகவும், புஷ்பிகா டி சில்வாவிடம் மன்னிப்பு கோரியதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஷங்கரில்லா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கையின் திருமதி அழகியான புஷ்பிகா டி சில்வா,
எனக்கு நடந்த சம்பவத்திற்காக நான் துவண்டு போய், விழ மாட்டேன். நான் இரும்புப் பெண்மணி என குறிப்பிட்டார்.
இதேவேளை எதிர்காலத்தில் நான் அரசியலில் நுழைவேன் என்றும் கூறினார்.