மீளுமா இலங்கை!! – டொலர்களை வழங்கும் மற்றுமோர் நாடு
நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
This builds on our long history of 🇳🇿 partnership with 🇱🇰, and part of NZ$25.7 million in development support over last 30 years. #manaakitanga
— Nanaia Mahuta (@NanaiaMahuta) May 14, 2022
இதேவேளை, இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 30 வருட கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்த 30 வருட காலத்திற்குள் நியூசிலாந்து இலங்கைக்கு 25.07 மில்லியன் நியூஸிலாந்து டொலர்களை அபிவிருத்தி திட்டங்களுக்காக உதவியாக வழங்கியதாகவும் அவர் கூறினார்.
நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா டுவிட்டர் செய்தி ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.