மீண்டும் அமுலுக்கு வரும் அடையாள அட்டை பயணம்!!!!
நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படியே வெளியே செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமானது 1, 3, 5, 7, 9 எனும் ஒற்றை இலக்கம் உள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0,2,4,6,8 எனும் இரட்டை எண்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாகக் கொண்டிருப்பின் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காகச் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.