மீண்டும் மூடப்படுகிறது பாடசாலைகள் – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் தொடர்ந்தும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் ஜி. எல் பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க பெரும்பாலான நாளாந்த செயற்பாடுகள் மே 7ஆம் திகதி வரை நிறுத்தப்படுகின்ற நிலையிலேயே பாடசாலைகளும் மே 7ஆம் திகதி வரை மூடப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வாரத்தில் பாடசாலைகள் கட்டம் கட்டமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.