நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள்!!
மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 868 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
வவுனியா, வந்துரம்ப, இமதுவ, வலஸ்முல்ல, மத்துகம, மெல்சிறிபுர, குருநாகல், அலவ்வ (இருவர்), மொரொன்துடுவ, ஓமல்பே, எம்பிலிபிட்டி, ஹல்தடுவத்த, கந்தெகெதர, பசறை, கொழும்பு – 05, தல்கஸ்வல மற்றும் பேருவல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.