எரிபொருள் நிரப்பும் வாகனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு புதிய Application!!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை கண்காணிக்கவும்,
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் நிகழ்நேர தரவுகளை பகிர்ந்து கொள்ளவும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை காவல்துறையின் தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட இந்த செயலி தற்போது பல இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
நுகர்வோரின் வாகன இலக்கத் தகடு விவரங்கள் குறித்த செயலியில் உள்ளிடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் வாகனங்களின் இலக்கத் தகடு எண் செயலியில் உள்ளிடுத்தப்பட்டவுடன்,
அதே வாகனம் ஒரே நாளில் வேறு ஏதேனும் நிலையத்திலிருந்து எரிபொருளை செலுத்தியதா மற்றும் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்ட அளவு ஆகியவற்றை அது அறிவிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
1) An App developed to monitor vehicles at fuel stations and share real time data with fuel stations islandwide is been tested in multiple locations currently. The application was developed by SL Police IT Dept. Number plate details of the consumers at the pump will be entered.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 26, 2022