விசேட வர்த்தமானி மூலம் சுகாதார உபகரண விலைகளை திருத்தியமைத்த….. சுகாதார அமைச்சு!!
இலங்கையில் 43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளதாக சுகாதார அமைச்சு விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த விசேட வர்த்தமானியானது சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.
இந்நிலையில்,
தனியார் சிகிச்சை நிலையங்களில் நிபுணத்துவ மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.