உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின் படி,
ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
குறித்த வைத்தியசாலையே பரீட்சை நிலையமாகவும் செயற்படும்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை நீண்ட கால தாமதமான பரீட்சை என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காகவே இவ்விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.