மரண அத்தாட்சிப் பத்திரத்தை வாழைப்பழச் சீப்புடன்….. காவிச் வந்த குரங்குகள்!!

மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை குரங்குகள் காவிச் சென்ற சம்பவம் ஒன்று அரனாயக ரஹல பிரதேசத் தில் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவி இறந்ததற்கான மரண அத்தாட்சிப்பத்திரத்தை நபரொருவர் அரனாயக பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் வாழைப்பழச் சீப்பு ஒன்றை தொங்கவிட்டிருந்த பையில் மரண அத்தாட்சி பத்திரத்தையும் வைத்துக்கொண்டு சைக்கிளில் வீடு நோக்கி அவர் பயணித்துள்ளார்.

இடைவழியில்,

தனது நண்பர் வீடு ஒன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால் அவரது வீட்டின் முன்பாக சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்ற அவர்,

திரும்பி வந்து பார்த்தபோதுசைக்கிளிலிருந்த தனது வாழைப்பழப் பொதியைக் காணவில்லை அதிலிருந்த மரண அத்தாட்சிப் பத்திரத்தையும் காணவில்லை

வாழைப்பழமும் மரண அத்தாட்சி பத்திரமும் குரங்குகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதை நண்பரும் உறுதிப்படுத்தியதால் அதனைத் தேடும் பணியில் அனைவரும் ஈடுபட்டனர்.

எனினும்,

தூக்கிச் செல்லப்பட்ட வாழைப்பழங்களோ மரண அத்தாட்சி பத்திரமோ கிடைக்கவில்லை.

இதனால்,

அவர் மீண்டும் பிறப்பு, இறப்பு பதிவாளரை சந்தித்து தனக்கு நேர்ந்த கதியை விளக்கி இன்னொரு மரண அத்தாட்சிப் பத்திரத்தை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *