மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாயார் மரணம்!!
ஓட்டமாவடியில் மின்சாரம் தாக்கி தாயொருவர் மரணித்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம், மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டுப்பெண் குளிர்சாதனப்பெட்டிலிருந்த பொருட்களை எடுக்க திறந்த போது குளிர்சாதனப்பெட்டியில் மின்னொழுக்கு ஏற்பட்டிருந்த காரணமாக மின்சாரம் தாக்கியதில் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய அபூபக்கர் பஸ்மியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.