இந்த வருட வரவு செலவுத் திட்டம்….. வாகனங்களை இறக்குமதி தொடர்பில் மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் கருத்து!!
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் அதிகரிப்புடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நிவாரணம் கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி செய்யப்படாததால் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக 400000 இற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாகத் தெரிவித்த அவர்
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.