முல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம்- விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மேலுமொரு அபாயகர பொருள்!!
முல்லைத்தீவு சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய போது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லதைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப் பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போதே குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது.
அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் காணப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.