முறுகண்டி காட்டுப்பகுதியில் தடத்தில் அகப்பட்ட சிறுத்தை புலி!!
முல்லைத்திவு முறுகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் அகப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டது.
வேறு ஒரு விலங்கை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட தடத்திலே குறித்த சிறுத்தை அகப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் B.கிரிதரன் தலைமையிலான வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மயக்க ஊசியை பயன்படுத்தி குறித்த சிறுத்தையை மீட்டனர்.
குறித்த சிறுத்தையை வில்பத்து காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் B.கிரிதரன் தெரிவித்தார்.