முல்லைத்தீவு – பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்….. நால்வர் கைது!!

முல்லைத்தீவுமல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த (10/07/2023)அன்று பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!! – Pasanga FM

இதனை தொடர்ந்து,

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மல்லாவி காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில்,

நான்கு சந்தேகநபர்களை மல்லாவி காவல்துறையினர் நேற்று முன்தினமும்(11/07/2023) கைது செய்திருந்தனர்.

அவர்களில் மூவர் நேற்று முன்தினமும், ஒருவர் நேற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *