மெஸ்ஸியர் 51 விண்மீன் மண்டலத்தில் சனி கிரகத்தின் அளவான கிரகம் ஒன்று கண்டுபிடிப்பு!!

எமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் முதலாவது கிரகத்தை கண்டுபிடித்ததற்கான சமிக்ஞைகளை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

எமது சூரியனுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களை வலம்வரும் சுமார் 5,000 வேற்றுக் கிரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த அனைத்து கிரகங்களும் எமது பால் வீதி விண்மீன் மண்டலத்திலேயே உள்ளன.

இந்நிலையில்,

மெஸ்ஸியர் 51 விண்மீன் மண்டலத்தில் சனி கிரகத்தின் அளவான கிரகம் ஒன்றை நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி கண்டுபிடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது எமது பால் வீதியில் இருந்து சுமார் 28 மில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

நட்சத்திரத்தின் குறுக்கால் கிரகம் பயணிக்கும்போது தொலைநோக்கிகளால் அவதானிக்கப்படும் ஒலிமங்கல் முறை மூலமே இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுவான தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான வேற்றுக் கிரகங்களை கண்டுபிடிக்க உதவியுள்ளது.

எனினும் தமது முடிவுகளை உறுதி செய்வதற்கு இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஜேர்னல் நேச்சர் சஞ்சிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதலாவது வேற்றுக் கிரகம் 1992 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடக்கம் இதுவரையில் பூமியில் இருந்து 3,000 ஒளியாண்டு தொலைவுக்குள்ளேயே வேற்று கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *