NASA – Spacex சுழற்சி முறையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியும் செயன்முறை….. தரையிறங்கினர் ஏழாவது குழுவினர்!!

நாசாவுடன்(NASA) இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்(Spacex) சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.

அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு செல்லும் குழுக்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருக்கும்.

இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில்(Crew Dragon Endeavour) குழு-6 அனுப்பப்பட்டது.

குழு 06 இன் பயணக் காலம் முடிவடையவுள்ளதால் குழு07 ஐ விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி,

இன்று(26/08/2023) புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு 0-7 உடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 விண்கலம்(SpaceX Falcon 9 spacecraft) விண்ணில் ஏவப்பட்டது.

இதில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கொமாண்டர்(Mission Commander) ஜாஸ்மின் மொக்பெலி,

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட்(Pilot) ஆண்ட்ரியாஸ் மொகென்சென்,

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும்

ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *