நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் CSK வீரரின் தங்கை!!
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’.
இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார்.
சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
அதேபோல் பிரபல பின்னணி பாடகி
ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்தி சாஹர் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சாஹரின் தங்கை ஆவார்.
இப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.