நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் தனுஷ் படம்
ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார்.
தற்போது, மீண்டும் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘அத்ரங்கி ரே’ நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அக்ஷய் குமார் அளித்தப் பேட்டியில் ஒன்றில், நேரடியாக ‘அத்ரங்கி ரே’ படத்தை ஓடிடியில் வெளியிட பரிசீலித்து வருவதாகத் தெரிவித்து இருந்தார். நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்துடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.