நெருக்கடி நிலை உருவாகும்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்
தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை விட அதிகமானவர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
இந்நிலையில், நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இதேவேளை, நாட்டில் நாளாந்தம் செய்யப்படும் பீசிஆர் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் முடிவுகள் வர கால தாமதம் ஏற்படுவதனால், பீசிஆர் செய்யப்பட்டவர்கள் வீட்டில் இருந்து வௌியில் வராது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.