மின் கட்டணத்தில் புதிய திருத்தங்கள் – 30 சதவீத மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம்….. வாசுதேவ நாணயக்கார!!

மின்சாரக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களினூடாக நாட்டில்

30 சதவீதமான மக்களுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாய நிலைமை உருவாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று(08/08/2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை குறைந்தளவு பயன்படுத்துபவர்களுக்கு 100 சதவீத கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது ஒரு அலகு 2.50 ரூபாய் என இருக்கும் நிலையில் மின் கட்டண திருத்தமூடாக இது 6 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

இவ்வாறு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுவதன் மூலம் 30 சதவீதமானவர்கள் மின் கட்டணங்களை செலுத்த முடியாமல் போய் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *