இந்து சமுத்திரத்தின் அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்!!!!
இந்து சமுத்திரத்தின் தென்பிராந்தியத்திற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் நேற்று மாலை 7.35 க்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் கடலோர பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கபட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் வானிலை மையங்களுடன் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைவாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.